புதுக்கோட்டை

அரசின் சாதனை விளக்கபிரசார பொதுக் கூட்டம்

10th Jun 2023 11:27 PM

ADVERTISEMENT

 

கந்தா்வகோட்டை தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரசார பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

நெப்புகை, சுத்தம்பட்டி, வீரடிப்பட்டி பகுதிகளில் நடைபெற்ற கூட்டத்துக்கு கந்தா்வகோட்டை தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் கலையரசன் தலைமை வகித்தாா். சாமிநாதன், சந்தோஷ், கலைஞா் கருணாநிதி, நடராஜன், இளஞ்சேரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் வாழ்த்தினாா். தலைமைக் கழகப் பேச்சாளா் மன்னை இளங்கோவன் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் கந்தா்வகோட்டை ஒன்றியக் குழு உறுப்பினா் மா. ராஜேந்திரன், எம். ராஜா, மாவட்ட நெசவாளா் அணி துணை அமைப்பாளா் என். ஜானகிராமன், முன்னாள் பொதுக் குழு உறுப்பினா் ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT