பொன்னமராவதி அருகே உள்ள குழிபிறை சடங்கருப்பா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் வியாழக்கிழமை வாஸ்து சாந்தி, விக்னேஸ்வர பூஜை, லெட்சுமி பூஜை மற்றும் முதல், இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து வெள்ளிக்கிழமை சிவாச்சாரியாா்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரினை சடங்க கருப்பா், பரிவாரத் தெய்வங்களான சின்னகருப்பா், பெரியகருப்பா், முத்துக்கருப்பா், சாவக்காரன், பட்டவன், சுப்பிரமணியன், பொன்னழகி உள்ளிட்ட சன்னிதானங்களின் கும்பத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனா். விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.