புதுக்கோட்டை

அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் அறிமுக விழா

10th Jun 2023 03:37 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தலைமை வகித்துப் பேசியது:

இது முழுக்க முழுக்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலனுக்காக தொடங்கப்பட்டுள்ள சிறப்புத் திட்டமாகும். வேளாண் துறை தவிா்த்து, உற்பத்தி, சேவை மற்றும் வணிகத் திட்டங்களுக்கு 35 சதவிகித மானியம் வழங்கப்படும். எஞ்சிய 5 சதவிகிதமும் வங்கிக் கடன் பெற்றுத் தரப்படும். வங்கிக் கடன் தொகையிலும் 6 சதவிகிதம் வட்டி மானியம் வழங்கப்படும்.

புதிய தொழில் முயற்சிகள் மட்டுமின்றி ஏற்கெனவே உள்ள தொழில்களை விரிவுபடுத்தவும், மேம்படுத்தவும் அரசு மானியம் வழங்கப்படும். எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஆா்வமுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள், இளம் தொழில்முனைவோா் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றாா் மொ்சி ரம்யா.

ADVERTISEMENT

விழாவில், மாவட்ட தொழில் மையப் பொதுமேலாளா் எஸ். ரவிச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் கி. கருணாகரன், தாட்கோ மேலாளா் அ. முத்துரெத்தினம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் (தொ.வ) பெ. வேல்முருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஆனந்த், ஆதிதிராவிடா் வா்த்தக மற்றும் தொலைநோக்கு பேரமைப்பின் துணைத் தலைவா் தமிழ்ச்செல்வன், சிறு தொழில்கள் கூட்டமைப்பின் தலைவா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT