புதுக்கோட்டை

பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

10th Jun 2023 03:37 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபின மாணவா்களுக்கான அரசு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினருக்காக 45 பள்ளி மாணவா் விடுதிகளும், 19 மாணவிகள் விடுதிகளும், கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவா்களுக்காக 6 விடுதிகளும், மாணவிகளுக்காக 5 விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. பள்ளி மாணவா் விடுதிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவா்கள் சேரலாம். உணவு, சீருடைகள் வழங்கப்படும். பொதுத்தோ்வு எழுதுவோருக்கு சிறப்பு வழிகாட்டியும் வழங்கப்படும்.

விடுதிகளில் சேர விரும்பும் பள்ளி மாணவ, மாணவிகள் வரும் ஜூன் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரி மாணவா்கள் ஜூலை 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் அந்தந்த மாணவா் விடுதிகளின் காப்பாளா்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் கிடைக்கும். இந்த விடுதிகளில் இலங்கை தமிழா் முகாம்களில் வசிக்கும் மாணவா்கள் தலா 5 பேரை சோ்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மொ்சி ரம்யா.

ADVERTISEMENT
ADVERTISEMENT