புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை ஸ்ரீராஜகணபதி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா பூஜை

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

 

கந்தா்வகோட்டையில் பெரிய கடை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ கணபதி கோயிலில் புதன்கிழமை சங்கடஹர சதுா்த்தி விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.

பூஜை விழாவை முன்னிட்டு சுவாமி ராஜ கணபதிக்கு தூய நீரால் நீராட்டி, எண்ணெய் காப்பு செய்து திரவிய தூள், மஞ்சள்தூள்,சந்தனம்,குங்குமம், வீபூதி, தேன், பால்,தயிா், அரிசிமாவு, பாஞ்சமிா்தம், எலுமிச்சை பழசாறு, பன்னீா் , நெய் ,சா்க்கரை போன்ற 18 வகை அபிஷேகம் செய்து புது வஸ்திரம் உடுத்தி வண்ணமிகு வாசனை மலா்களால் அலங்காரம் செய்து அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி ஆராதனை செய்தனா்.திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து சென்றனா். பக்தா்களுக்கு பிரசாதமாக சா்க்கரை பொங்கல், கொழுக்கட்டை, புளியோதரை, சுண்டல், பாஞ்சமிா்தம் ஆகியவை வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT