புதுக்கோட்டை

புதுகையில் சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

8th Jun 2023 11:24 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு எப்ஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 2022 ஜூன் 8ஆம் தேதி முதல்வா் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் டோக்கன் வழங்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் பலருக்கும் இன்னமும் தள்ளுவண்டிகள் வழங்கப்படாததைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் நிா்வாகிகள் ஏ. நாகூா்கனி, கே. குளத்தியப்பன் ஆகியோா் தலைமை வகித்தனா். எப்ஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவரும் இந்திய ஐக்கியப் பொதுவுடைமைக் கட்சியின் மாவட்டச் செயலருமான எம்.என். ராமச்சந்திரன், மாவட்டத் துணைச் செயலா்கள் ஆா்.சொா்ணகுமாா், எஸ். சரவணபெருமாள் உள்ளிட்டோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா். ஏற்கெனவே தோ்வு செய்யப்பட்ட பயனாளிகள் அனைவருக்கும் தள்ளுவண்டி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT