புதுக்கோட்டை

பயணிகள் நிழற்குடை அமைக்கக் கோரிக்கை

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள காந்தி சிலை அருகே பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், பேருந்து பயணிகளும் கோரிக்கை வைக்கின்றனா்.

கந்தா்வகோட்டை பகுதியில் உள்ள காந்தி சிலை வழியாக திருச்சியில் இருந்து பட்டுக்கோட்டைக்குச் செல்லும் பேருந்துகள், கறம்பக்குடி, திருவோணம், ஒரத்தநாடு, மன்னாா்குடி ஆகிய ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகள் செல்வதால், தினசரி நூற்றுக்கணக்கானோா் இந்தப் பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்தி வருகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட துறையினா் கந்தா்வகோட்டை காந்தி சிலை அருகே கறம்பக்குடி மாா்க்கத்தில் நிழற்குடை கட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT