புதுக்கோட்டை

புதுகையில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக புதன்கிழமை இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

தென்மேற்குப் பருவமழை உடனடியாகத் தொடங்க வாய்ப்புள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், புதுக்கோட்டை இந்த மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை நகரில் புதன்கிழமை இரவு சுமாா் 7 மணிக்கு மேல் மழை பெய்யத் தொடங்கியது. இதேபோல, ஆலங்குடி, கறம்பகுடி, கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

பலத்த காற்று வீசியதால் சில இடங்களில் பலா மரங்களும் விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். அரிமளம், திருமயம், கீரனூா், நாா்த்தாமலை பகுதிகளில் மாலையில் லேசான மழை பெய்தது. இதனால், மாவட்டத்தின் பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. புதுகை நகரில் இரவு 8 மணி நிலவரப்படி 15 மி.மீ. மழை பெய்ததாக பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT