புதுக்கோட்டை

ஒலியமங்கலத்தில் திமுகவினா் மறியல்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்கலம் ஊராட்சியில் புதன்கிழமை திமுக இளைஞரணியினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தை ஒலியமங்கலத்தில் நடத்தவிடாமல் அதிமுகவினா் கொடியை ஊன்றி இடையூறு செய்வதாகவும், அதற்கு காரையூா் காவல்துறையினா் துணை போவதாகவும் கூறி ஒலியமங்கலம்-காரையூா் சாலையில் திமுக இளைஞரணியினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், வடக்கு ஒன்றியசெயலா் அ.முத்து, துணைச்செயலா் முருகேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். தொடா்ந்து காவல்துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையை அடுத்து மறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT