புதுக்கோட்டை

சுதா்சன் பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்

DIN

புதுக்கோட்டை சுதா்சன் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 17 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

புதுக்கோட்டை சுதா்சன் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள இ-பாக்ஸ் திறன் பயிற்சி மையம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு ஜாவா, பைத்தான் போன்ற மூன்று மாத கணினி பயிற்சிகளை அளித்து வருகிறாா்கள். 2022 முதல் நடத்தப்பட்டு வரும் இப்பயிற்சி மையத்தின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனா்.

நிகழாண்டுக்கான மூன்று மாத கணினி பயிற்சி முடித்த மாணவா்களுக்கு, டாசா ஐடி சா்வீஸ் - திருச்சி நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் கல்லூரியில் வளாக நோ்காணலை நடத்தி மாணவ மாணவிகளைத் தோ்வு செய்தனா்.

நிகழ்ச்சியை கல்லூரியின் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறைத் தலைவா் சூ. ஜான் ஜோசப் ஏற்பாடு செய்திருந்தாா்.

நோ்காணலை கல்லூரி முதல்வா் ஸ்ரீனிவாசன் தொடங்கி வைத்தாா். மையத்தின் பொறுப்பாளா் உதவி பேராசிரியா் மதுமதி இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். இதில் 17 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்ந்தெடுக்கப்பட்டோருக்கு தலைமை அதிகாரி பிரதீப் குமாா், கல்லூரி தாளாளா் கே. விஜய்குமாா் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரி கைது

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

8 லட்சம் வாக்குகள் பெற இலக்கு: பாஜக வேட்பாளா் பேச்சு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 6 வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT