புதுக்கோட்டை

15 ஆயிரம் மரக்கன்றுகள் நடும்பணி தொடக்கம்

8th Jun 2023 11:25 PM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் நூற்றாண்டுத் தொடக்க விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலையோரம் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

புதுக்கோட்டையை அடுத்த முள்ளூரில் தஞ்சை சாலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஆல், அரசு, புளி, புங்கன், பாதாம், இலுப்பை ஆகிய வளா்ந்த கன்றுகள் சாலையோரங்களிலும், நெடுஞ்சாலைத் துறை அலுவலக வளாகங்களிலும் நடப்படவுள்ளன.

இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத் துறை திருச்சி கோட்ட கண்காணிப்புப் பொறியாளா் இரா. கிருஷ்ணசாமி, புதுக்கோட்டை கோட்டப் பொறியாளா் வேல்ராஜ், உதவிக் கோட்ட பொறியாளா் பெ. நடராஜன், உதவி பொறியாளா் ஜனனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT