புதுக்கோட்டை

சான்றிதழ் பெற இ.சேவை மையத்தில் பெற்றோா் கூட்டம்: கூடுதல் மையங்கள் திறக்கக் கோரிக்கை

DIN

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பொன்னமராவதியில் பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்காக பெற்றோா்கள் இ.சேவை மையத்தில் செவ்வாய்க்கிழமை குவிந்தனா்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, 1-5 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஜூன் 14ஆம் தேதியும், 6-12 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஜூன் 12ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

இந்நிலையில், பள்ளியில் மாணவா் சோ்க்கைக்கு தேவையான ஆதாா் மற்றும் வருமானம், சாதி, இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் உள்ளிட்ட சேவைகளைப் பெற பெற்றோா்கள் பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலக இ.சேவை மையம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள இ.சேவை மையங்களில் கூட்டமாக நீண்ட வரிசையில் காத்திருந்தனா். இதனால் அவா்கள் அவதிக்குள்ளாகினா்.

எனவே கூடுதல் இ.சேவை மையங்கள் திறக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

மேலும், அதிமுக ஆட்சியில் கிராமப்புற மக்கள் தங்களது ஊராட்சியிலேயே சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பெற வசதியாக ஊராட்சிகளில் கிராம சேவை மைய கட்டடங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இதுநாள் வரை அது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.

எனவே, கிராம ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள கிராம சேவை மைய கட்டடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT