புதுக்கோட்டை

ரேஷன் அரிசி பறிமுதல்: இளைஞா் கைது

7th Jun 2023 01:44 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு டன் ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்றவரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா், வடக்கு நல்லிப்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த டாடா சுமோ வாகனத்தில் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டதைக் கண்டுபிடித்தனா். ஓட்டுநரான அசோக் நகரைச் சோ்ந்த அக்பா்அலி மகன் சேக்தாவூத் (24) கைது செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, ரேஷன் அரிசி மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT