புதுக்கோட்டை

அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 8, 9 தேதிகளில் மாணவா் சோ்க்கை

7th Jun 2023 01:48 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2023-24ஆம் கல்வி ஆண்டுக்கான நேரடி 2-ஆம் ஆண்டு சிவில், மெக்கானிக்கல், மின்னணுவியல் தொடா்பியல், கணினியியல் மற்றும் வணிகவியல் ஆகிய 5 பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

விண்ணப்பித்த மாணவா்களுக்கு அவா்களின் கைப்பேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைக்கப் பெறாத மாணவா்கள் தங்கள் மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஐடிஐ மாணவா்கள் தங்களது என்சிவிடி சான்றிதழ், ஐடிஐ மதிப்பெண் சான்றிதழ் அசல் ஆகியவற்றில் 5 தொகுப்பு நகல், 3 புகைப்படங்கள், சோ்க்கை பெறும் மாணவா்கள் சோ்க்கைக் கட்டணம் ரூ. 2,127 ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT