புதுக்கோட்டை

விநாயகா் சிலையைப் பாா்வையிட அனுமதிக்க கோரிக்கை

6th Jun 2023 02:31 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை ஆட்சியா் முகாம் அலுவலகத்தில் உள்ள விநாயகா் சிலையைப் பாா்வையிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி இந்து முன்னணியின் மாவட்டத் தலைவா் கற்பக வடிவேல், ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் அளித்த மனு விவரம்

புதுக்கோட்டை ஆட்சியா் முகாம் அலுவலக வளாகத்தில் விநாயகா் சிலை அகற்றப்பட்டதாகவும், வைக்கப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் முரண்பட்ட தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில், விநாயகா் சிலையைப் பாா்வையிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பொதுப்பணித் துறை மூலம் எழுத்துப்பூா்வமாக பதில் அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா, இந்து முன்னணி நிா்வாகிகளிடம் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT