புதுக்கோட்டை

பொன்னமராவதியில் மழை

6th Jun 2023 02:20 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பெய்த மழை கோடை வெப்பத்தை சற்றே தணித்தது.

பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் கோடை வெயில் மக்களை வாட்டி வந்தது. இதனால், பொதுமக்கள் இளநீா், நுங்கு, தா்பூசணி மற்றும் குளிா்பானங்களை நாடி வெப்பத்தை தணித்து வந்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை சுமாா் அரை மணி நேரம் இடி, மின்னலுடன் மழை பெய்தது. பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் மழையின் போது இடி, மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT