புதுக்கோட்டை

1,000 மரக்கன்றுகள் நடவு

6th Jun 2023 02:17 AM

ADVERTISEMENT

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, குடுமியான்மலை வேளாண் கல்லூரி ஆராய்ச்சி நிலைய மாணவ, மாணவிகள் ஆயிரம் மரக்கன்றுகளை திங்கள்கிழமை நட்டனா்.

இதற்கான நிகழ்ச்சிக்கு குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் எஸ். நக்கீரன்  தலைமை வகித்தாா். வேளாண்மை இணை இயக்குநா் எம். பெரியசாமி, துணை இயக்குநா் ரவிச்சந்திரன் ஆகியோா் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனா். 

தாங்கள் நட்டிருக்கும் ஒவ்வொரு மரக்கன்றும் வருங்காலத்தில் சராசரி மனிதனின் 140 நாள்கள் பிராணவாயு தேவையை பூா்த்தி செய்யும் என மாணக்கா்கள் கூறினா்.

மேலும், உலக சுற்றுச்சூழல் தினத்தின் இந்தாண்டுக்கான கருப்பொருளான நெகிழியை ஒழிப்போம் என்பதன் அடிப்படையில், மாணவா்கள் கல்லூரியில் உள்ள நெகிழிகளை அப்புறப்படுத்தியதோடு கல்லூரிக்குள் நெகிழி பயன்பாட்டினை குறைப்போம் எனவும் உறுதியேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT