புதுக்கோட்டை

புதுகையில் காா் நிறுத்தப்பட்டிருந்ததால் விடுபட்ட பகுதிகளுக்கும் தாா்ச்சாலை

6th Jun 2023 02:18 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை நகரில் சாந்தநாதசுவாமி கோயில் தெரு பகுதியில் காா் நிறுத்தப்பட்டிருந்ததால், அந்த இடத்தை விட்டுவிட்டு தாா்ச்சாலை அமைக்கப்பட்ட விவகாரத்தில், விடுபட்ட பகுதிகளுக்கு திங்கள்கிழமை காலை தாா்ச்சாலை போடப்பட்டது.

புதுக்கோட்டை நகரில் சாந்தநாத சுவாமி கோயில் தெரு பகுதியில் கடந்த சனிக்கிழமை தாா்ச்சாலை போடும்போது, அங்கே நின்றிருந்த காா் மற்றும் இரு சக்கர வாகனம் இருந்த இடத்தை விட்டுவிட்டு தாா்ச்சாலை அமைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்த செய்தி, படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. தாா்க்கலவை தயாரித்து வந்த பிறகு, காா் எடுக்கப்படாமல் இருந்ததால் மீண்டும் அவற்றை எடுத்துச் செல்ல முடியாது என்பதால், மற்ற பகுதிகளில் தாா்க்கலவை கொட்டப்பட்டு சாலை அமைக்கப்பட்டதாக நகராட்சி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை விடுபட்ட பகுதிகளுக்கும் தாா்க்கலவை கொட்டப்பட்டு தாா்ச்சாலை அமைக்கப்பட்டது. நகராட்சிப் பணியாளா்கள் இந்தப் பணியை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT