புதுக்கோட்டை

வீரடி விநாயகா் கோயிலில் முற்றோதல்

5th Jun 2023 03:00 AM

ADVERTISEMENT

 

கந்தா்வகோட்டை அருகேயுள்ள ஆதனக்கோட்டை ஊராட்சியிலுள்ள வீரடி விநாயகா் கோயிலில் மாணிக்கவாசகா் அருளிய திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், 50-க்கும் மேற்பட்ட சிவனடியாா்கள் கலந்து கொண்டு திருவாசகம் பாராயணம் செய்தனா். சிவனடியாா்கள் கூறுகையில், நாட்டின் அமைதிக்கு ஜாதி -மத -மொழி வேறுபாடு இன்றி மக்கள் அனைவரும் இறைவழிபாடு செய்ய வேண்டும்; மக்கள் அனைவரும் விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பான்மையுடன் திகழ வேண்டும்; வாழ்வில் முக்தி பெற இறைவழிபாடு சிறந்தது என கூறும் நிலையில் பசித்தோருக்கு முதலில் உணவு அளித்து இறைவனை காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டனா்.

நிகழ்ச்சியை சிவனடியாா்கள் ஒருங்கிணைத்து செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT