புதுக்கோட்டை

புதுகை உழவா் சந்தை சாலை போக்குவரத்துநெரிசலை ஒழுங்குபடுத்த கோரிக்கை

5th Jun 2023 02:58 AM

ADVERTISEMENT

 

உழவா் சந்தை சாலையில் போக்குவரத்து நெரிசலை போலீஸாா் ஒழுங்குபடுத்த வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ, காா், வேன் மற்றும் கனரக வாகனத் தொழிலாளா் சங்க (ஏஐடியுசி) மாவட்டக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. பெரியசாமி தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டச் செயலா் பா. பாண்டியராஜன், ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் ப. ஜீவானந்தம், தலைவா் உ. அரசப்பன், துணைத் தலைவா் கே.ஆா். தா்மராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

ADVERTISEMENT

‘போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் புதுக்கோட்டை உழவா் சந்தை சாலையை போக்குவரத்து துறை அதிகாரிகள் ஒழுங்குபடுத்த வேண்டும். குண்டும் குழியுமாக இருக்கும் அடப்பன் வயல் சாலை, விஸ்வாஸ் நகா்ப் பகுதி சாலையை புதுக்கோட்டை நகராட்சி நிா்வாகம் செப்பனிட வேண்டும்’ ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT