புதுக்கோட்டை

செவலூா் பூமிநாதா் கோயிலில் வாஸ்து பூஜை

5th Jun 2023 03:00 AM

ADVERTISEMENT

 

பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் பூமிநாதா்- ஆரணவல்லி கோயிலில் வாஸ்து நாளையொட்டி வாஸ்து பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாஸ்து தலமாக போற்றப்படும் இக்கோயிலில் வாஸ்து நாள்களில் வாஸ்து பூஜை சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை தொடக்கமாக சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து, பூமிநாதா் சுவாமி மற்றும் ஆரணவல்லி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட செங்கற்களை வீடு கட்டுவோா், கட்ட எண்ணுவோா், வீடு கட்டடப் பணி தடைப்பட்டோா் வாஸ்து நலன் வேண்டி பெற்றுச் சென்றனா்.

இந்தப் பூஜையில் சிவகங்கை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். பூஜைக்கான ஏற்பாடுகளை செவலூா் வாஸ்து பூஜை நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT