புதுக்கோட்டை

புதுகையில் ஜூலை 14-23-இல்கம்பன் பெருவிழா

5th Jun 2023 02:59 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டையில் ஜூலை 14ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 48-ஆம் ஆண்டு கம்பன் பெருவிழாவை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கம்பன் கழகத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு, கம்பன் கழகத் தலைவா் எஸ். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.

கம்பன் கழகத்தின் செயலா் ரா. சம்பத்குமாா், துணைத் தலைவா்கள் எம்ஆா்எம். முருகப்பன், அருண் சின்னப்பா, பொருளாளா் சி. கோவிந்தராஜன், கூடுதல் செயலா் புதுகை சா. பாரதி, இணைச் செயலா்கள் காடுவெட்டி குமாா், பேராசிரியா் வெ. முருகையன், ரா. கருணாகரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ஜூலை 14 வெள்ளிக்கிழமை தொடங்கி ஜூலை 23 ஞாயிற்றுக்கிழமை வரை பத்து நாள்கள் புதுகை நகா்மன்ற வளாகத்தில் கம்பன் பெருவிழாவைக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT