புதுக்கோட்டை

பள்ளித் திறப்புக்கான முன்னேற்பாடுகளைமேற்கொள்ள அறிவுரை

4th Jun 2023 12:38 AM

ADVERTISEMENT

 

வரும் ஜூன் 7 ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளையும் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மா. மஞ்சுளா அறிவுறுத்தியுள்ளாா்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற முன்னேற்பாட்டு ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது:

மாணவா் சோ்க்கை, பாடப் புத்தகங்கள், நோட்டுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள், கால அட்டவணை தயாா் செய்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை தலைமை ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி திறக்கும் நாளன்றே அனைவருக்கும் புத்தகங்களை வழங்க வேண்டும். எந்தத் தொய்வும் இல்லாமல் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் மஞ்சுளா.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் 100 சதவிகிதம் தோ்ச்சி பெற்றுத் தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு பொன்னாடை போா்த்தி கெளரவப்படுத்தினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT