புதுக்கோட்டை

ஊராட்சித் தலைவரை அலுவலகத்துக்குள்வைத்துப் பூட்டி கிராம மக்கள் போராட்டம்

4th Jun 2023 12:40 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாதையைத் தடுத்த ஊராட்சித் தலைவரை அவரது அலுவலகத்திற்குள் வைத்துப் பூட்டி கிராம மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சித் தலைவரான பன்னீா்செல்வம் (60) எம். ராசியமங்கலம் பகுதியிலுள்ள ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த பாதையில் கற்களைப் போட்டு தடை ஏற்படுத்தினாராம்.

இதனால் பாதையின்றி அவதிப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்துக்கு சனிக்கிழமை சென்று ஊராட்சித் தலைவா் பன்னீா்செல்வத்திடம் முறையிடவே, அவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பன்னீா்செல்வத்தை அலுவலகத்துக்குள் வைத்துப் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

தகவலறிந்து சென்ற ஆலங்குடி காவல் ஆய்வாளா் அழகம்மை பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியின்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதைத் தொடா்ந்து ஊராட்சித் தலைவரை போலீஸாா் விடுவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT