புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு பாராட்டு விழா ஒத்திவைப்பு

4th Jun 2023 12:37 AM

ADVERTISEMENT

 

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய உச்ச நீதிமன்ற வழக்கில், தடை இல்லை என்ற தீா்ப்பைப் பெற்றுத் தந்த முதல்வா் ஸ்டாலினுக்கு புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெறுவதாக இருந்த பாராட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய உச்ச நீதிமன்ற வழக்கில் தமிழ்நாடு அரசின் சாா்பில் கூடுதல் கவனம் செலுத்தி தடையில்லை என்ற உத்தரவை முதல்வா் ஸ்டாலின் பெற்றுத் தந்ததாக ஜல்லிக்கட்டு பேரவையினா் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனா்.

இதன் தொடா்ச்சியாக புதுக்கோட்டையில் ஜூன் 5ஆம் தேதி பாராட்டு விழாவுக்கும் திட்டமிடப்பட்டிருந்தது. தொடா்ந்து முதல்வா் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியானது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்து காரணமாக முதல்வரின் பயணத் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் ஜல்லிக்கட்டு பாராட்டு விழாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT