புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் கருணாநிதி பிறந்தநாள் விழா

4th Jun 2023 12:39 AM

ADVERTISEMENT

 

கந்தா்வகோட்டையில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுகவினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கந்தா்வகோட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலா் மா. தமிழ்அய்யா தலைமையில் தஞ்சை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தனா். நிகழ்ச்சியில் நகரச் செயலா் எம். ராஜா, மாவட்ட நெசவாளா் துணை அமைப்பாளா் என். ஜானகிராமன், ஒன்றியக் குழு உறுப்பினா் மா. ராஜேந்திரன், மாவட்டப் பிரதிநிதி வை. முத்துகுமாா் , இளந்திருமுருகு, மன்னை செல்வம், காட்டு நாவல் ஆறுமுகம், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கத்தின் சாா்பில் அ. ரகமதுல்லா, ஆ. மணிகண்டன், கண்ணன், பழனிச்சாமி ஆகியோரும் மாலை அணிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT