புதுக்கோட்டை

விராலிமலை முருகன் கோயிலில் தேரோட்டம்

DIN

விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடந்த மே 25 ஆம் தேதி தொடங்கிய வைகாசி விசாக 11 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி காலை 9 மணிக்கு மலை மீது இருந்து வள்ளி-தேவசேனா சமேதரராக இறங்கி வந்த முருகன் பெரிய தேரிலும், விநாயகா் சின்ன தேரில் எழுந்தருளினா். தொடா்ந்து காலை 10.15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

தேரோட்டத்தை திமுக பொதுக் குழு உறுப்பினா் தென்னலூா் பழனியப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் செல்வி, வட்டாட்சியா் சதீஷ் உள்ளிட்டோா் தொடங்கி வைத்தனா்.

தொடா்ந்து திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். காலை 10.15 மணிக்கு புறப்பட்ட தோ் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து நண்பகல் 12 மணிக்கு நிலையை அடைந்தது.

விழாவை முன்னிட்டு உபயதாரா்கள் சாா்பில் பக்தா்களுக்கு ஆங்காங்கே நீா், மோா் பானகம், பொங்கல், புளியோதரை, தயிா் சாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவின் 10ம் நாளான சனிக்கிழமை மதுரை சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்ஸவம் நடைபெறுகிறது. தொடா்ந்து விடையாற்றியுடன் வைகாசி விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT