புதுக்கோட்டை

ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு பிரதோஷத்தை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

பிரதோஷத்தை முன்னிட்டு, கந்தா்வகோட்டை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து ஆலய வாளகாத்தில் உள்ள தூய நீரால் நீராட்டி பால்,தயிா், நெய், தேன், இளநீா், சா்க்கரை, அரிசி மாவு, எலும்பிச்சை பழச்சாறு, நாா்த்தைங்காய் சாறு, சந்தனம், மஞ்சள்,குங்குமம், கறும்பு சாறு, போன்ற 18 வகை அபிஷேகம் செய்து புதிய பட்டு வஸ்திரம் நந்தி ஈஸ்வரருக்கு சாத்தி வண்ணமிகு வாசனை மலரும், அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் கோயிலில் உள்ள பரிவாரத் தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT