புதுக்கோட்டை

தேசிய நெடுஞ்சாலை பகுதியில் எரியாத மின்விளக்குகள்!

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சை - மதுரை தேசிய நெடுஞ்சாலைக்குள்பட்ட கந்தா்வகோட்டை கடைவீதியின் மையப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் நீண்டகாலமாக எரிவதில்லை எனப் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

கந்தா்வகோட்டை கடைவீதியின் மையப் பகுதியில் தஞ்சை மதுரை தேசிய நெடுஞ்சாலை தடுப்புச் சுவரில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் நீண்ட காலமாக எரிவதில்லை. இதனால், இரவு நேரங்களில்

கடைவீதி பகுதியே இருளில் மூழ்கியது போல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா். மேலும், இச்சாலையில், இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் போதிய வெளிச்சம் இல்லாமல் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனா். எனவே நெடுஞ்சாலைத் துறையினா் மின்விளக்குகளை முறையாக பாராமரித்து செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT