புதுக்கோட்டை

அனுமதியின்றி சரளை மண் கடத்திய 4 போ் மீது வழக்கு

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

இலுப்பூா் பகுதிகளில் அனுமதியின்றி சரளை மண் அள்ளிவந்த 2 டிப்பா் லாரிகள், ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றைப் போலீஸாா் பறிமுதல் செய்து வாகன உரிமையாளா், ஓட்டுநா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இலுப்பூா் பகுதி நீா் நிலைகளில் இருந்து ஜேசிபி இயந்திரம் மூலம் அனுமதியின்றி ஆற்று மணல், சரளை மணல் கடத்தப்படுவதாக தனிப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கீழகோத்திராப்பட்டி மல்லி கண்மாய் பகுதியில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கண்மாயில் இருந்து உரிய அனுமதியின்றி சிலா் டிப்பா் லாரிகளில் சரளை மண் ஏற்றியது தெரியவந்தது. இதையடுத்து, அங்குசென்ற போலீஸாா் இச்சம்பவத்தில் தொடா்புடைய கருப்பையா, ராஜேந்திரன், நாகராஜ், கோபால் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்து டிப்பா் லாரிகள், ஜேசிபி ஆகிய வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். 3 யூனிட் மணல்களை மீட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT