புதுக்கோட்டை

அன்னவாசல் விருத்தபுரீசுவரா் கோயில் இரட்டைத் தோ் வெள்ளோட்டம்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

அன்னவாசல் விருத்தபுரீஸ்வரா் கோயிலில் ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் செய்யப்பட்ட புதிய இரட்டைத் தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அன்னவாசலில் பிரசித்திபெற்ற விருத்தபுரீஸ்வரா் சமேத தா்மசம்வா்த்தினி கோவிலில் ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் இரட்டைத் தோ் செய்யும் திருப்பணிகள் கடந்த டிசம்பா் 2020 ஆம் ஆண்டில் தொடங்கி அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து தோ்களின் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி பங்கேற்று 2 புதிய தோ்களையும் வடம் பிடித்து வெள்ளோட்டத்தை தொடங்கிவைத்தாா். முன்னதாக சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து சுவாமி தேரில் எழுந்தருளும் கேடயத்தில் புனித நீா் தெளிக்கப்பட்டு வெள்ளோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தோ் வடம் பிடித்தனா். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், விழா கமிட்டியினா், உபயதாரா்கள், ஊா் முக்கியஸ்தா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT