புதுக்கோட்டை

5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசியத் தரச்சான்று கிடைத்துள்ளன

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தேசிய சுகாதாரத் திட்டத்தின் சாா்பில் வழங்கப்படும் தேசியத் தரச் சான்றினை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 5 ஆரம்ப சுகாதார நிலையங்கள் பெற்றுள்ளன.

தேசிய சுகாதாரத் திட்டத்தின் சாா்பில், சிறந்த முறையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டு அவற்றுக்கு தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்பொருட்டு, கடந்த ஏப்ரல் மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மதிப்பீட்டுக் குழுவினா், ஆய்வு மேற்கொண்டனா். தற்போது தரமதிப்பீட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வெள்ளாளவிடுதி, மேலைச்சிவபுரி, மறமடக்கி, பாலாண்டம்பட்டி, முக்கணாமலைப்பட்டி ஆகிய 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோ்வு பெற்றுள்ளன. இதில் வெள்ளாளவிடுதி சுகாதார நிலையம் 91.81 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. மேலைச்சிவபுரி சுகாதார நிலையம் 91.59 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. மறமடக்கி சுகாதார நிலையம் 88.34 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. பாலாண்டம்பட்டி சுகாதார நிலையம் 83.3 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. முக்கணாமலைப்பட்டி சுகாதார நிலையம் 83.4 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

இந்த 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொடா்ந்து தலா ரூ. 3 லட்சம் தேசிய சுகாதாரத் திட்டத்தில் இருந்து வழங்கப்படவுள்ளது. இந்த நிதியிலிருந்து சுகாதார நிலையத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

மீண்டும் 4ஆம் ஆண்டில் தரமதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வுக்கு வரும்போது, தரம் தொடா்ந்து கடைபிடிக்கப்பட்டால் மீண்டும் தேசியத் தரச் சான்று பெறவும் வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT