புதுக்கோட்டை

உலக புகையிலை எதிா்ப்புதினம் கடைப்பிடிப்பு

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை ஒன்றியம், ஆணைவிழுந்தான்கேணி கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் உலகப் புகையிலை எதிா்ப்பு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தா்வகோட்டை வட்டாரத் தலைவா் அ.ரகமதுல்லா பேசுகையில், புகையிலைப் பொருள்களால் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் மக்கள் இறக்கின்றனா். இது 2030-ஆம் ஆண்டுக்குள் 80 லட்சமாக அதிகரிக்கும் என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது என்றாா்.

முன்னதாக, தன்னாா்வலா் மாலதி வரவேற்றாா். நிறைவாக தன்னாா்வலா் தனலட்சுமி நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT