உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி புதுக்கோட்டையில் விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன.
புதுக்கோட்டை மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற உறுதிமொழியேற்பு நிகழ்வில், நிா்வாக அலுவலா் புவனேஸ்வரி தலைமையில் நோ்முக உதவியாளா் சேதுராமன் உள்ளிட்ட மருத்துவத் துறை பணியாளா்கள் கலந்து கொண்டனா். நற்சாந்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. மருத்துவ அலுவலா் ராணி தலைமையில் மருத்துவப் பணியாளா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டு அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். இதேபோல, அன்னவாசல், பொன்னமராவதி, அரிமளம், குன்றாண்டாா்கோவில், விராலிமலை ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.