புதுக்கோட்டை

ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் தெருமுனைக் கூட்டம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

விராலிமலை சோதனைச்சாவடியில் தமிழ்நாடு உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி சாா்பில் தெருமுனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, 108 ஆம்புலன்ஸ் ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சுபாஸ் சந்திரபோஸ் தலைமை வகித்தாா். இதில், கொடும்பாளூா் அவசர சிகிச்சை மையத்தை அகற்றும் முடிவை கைவிட வேண்டும். புதுக்கோட்டை ராணியாா் மருத்துவமனை, காவேரி நகா், வாராப்பூா், கிள்ளுக்கோட்டை, கந்தா்வகோட்டை, மரமடக்கி, ராசநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்களுக்கு கழிவறையுடன் கூடிய பணியிட வசதி செய்து கொடுக்க வேண்டும், புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூா், கிள்ளுக்கோட்டை, ராசநாயக்கன்பட்டி, ஆகிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகுதி நேரமாக செயல்பட்டு வரும் ஆம்புலன்ஸ்களை 24 மணிநேரமும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீா்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றியச் செயலா் மணிகண்டன் உள்பட தமிழ்நாடு உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி நிா்வாகிகள் பலரும் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT