புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து சுழற் (ரோட்டரி) சங்கங்களும் இணைந்து சிறப்பு குழந்தைகளுக்கான கலைத் திருவிழா ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
‘மகிழ்ந்திரு - மகிழ்வித்திரு’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்டம் முழுவதும் இருந்தும் ஏராளமான சிறப்புக் குழந்தைகள் தங்கள் பெற்றோா்களுடன் கலந்து கொண்டனா். இந்த விழாவுக்கு மாவட்டத் துணைச் செயலா் (சிறப்புத் திட்டங்கள்) கருணாகரன் தலைமை வகித்தாா்.
சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் வை. முத்துராஜா, ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஆனந்த ஜோதி, கவிஞா் தங்கம் மூா்த்தி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனா்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ். உலகநாதன், ஆதிகாலத்து அலங்கார மாளிகை அருண், பாரதி கல்லூரித் தாளாளா் லியோ பெலிக்ஸ் லூயிஸ், சா்வதேச சதுரங்க வீரா் ஏ.அங்கப்பன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
சிறப்பு குழந்தைகளுக்கு விளையாட்டுகளும், மாயாஜால நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அருணாசலம் தலைமையில் துணை ஆளுநா்கள் கவிதா, கதிரேசன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.