புதுக்கோட்டை

நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கோரி மனு அளிக்கும் போராட்டம்

12th Jul 2023 02:55 AM

ADVERTISEMENT

நகா்ப்புற வேலைஉறுதித் திட்டத்தை அமல்படுத்தக்கோரி, புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோா் பங்கேற்ற மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் புதுக்கோட்டை நகராட்சியையும் இணைத்து வேலையின்றித் தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கமும் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கமும் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தின. தொடா்ந்து, புதுக்கோட்டை சிறைச்சாலை முக்கத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது.

போராட்டத்துக்கு ஜனநாயக மாதா் சங்கத்தின் நகரத் தலைவா் ஆா். நிரஞ்சனாதேவி தலைமை வகித்தாா்.

மாதா் சங்கத்தின் மாநிலச் செயலா் எஸ்.கே. பொன்னுத்தாய், விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலா் எஸ். சங்கா், மாவட்டச் செயலா் டி. சலோமி, மாநிலக் குழு உறுப்பினா் கே.சண்முகம், மாதா் சங்க மாவட்டச் செயலா் பி. சுசிலா, தலைவா் எஸ். பாண்டிச்செல்வி உள்ளிட்டோா் பேசினா்.

ADVERTISEMENT

போராட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) து. தங்கவேலுவிடம் நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கேட்டு ஆயிரத்துக்கும் அதிகமான மனுக்கள் கொடுக்கப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT