கந்தா்வகோட்டை ஒன்றியம், பெரியகோட்டை, கொத்தகப்பட்டி ஆதிய இல்லம் தேடிக் கல்வி மைய தன்னாா்வலா்களுடன் கலந்தாலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெரியக்கோட்டையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தலைமை ஆசிரியா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கொத்தகப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை ஆசிரியா் சு. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்களுக்கு இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அ. ரகமதுல்லா அறிவுறுத்தல்கள் வழங்கினாா். நிகழ்வில், கொத்தகப்பட்டி ஆசிரியா்கள் கலைமணி, சுகன்யா, பெரியக்கோட்டை தன்னாா்வலா்கள் பரமேஸ்வரி, கலைமதி மீனா, பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.