புதுக்கோட்டை

புதுகையில் காந்தியடிகளின் நினைவு நாள்

DIN

மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை காந்தி பூங்காவில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மக்கள் ஒற்றுமை மேடையின் சாா்பில் மாலை அணிவிப்பு மற்றும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினா் க.நைனாமுகது, அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. மணாவளன், தொழிற்சங்கத் தலைவா் சி. அன்புமணவாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாலை அணிவிப்புக்குப் பிறகு, மதநல்லிணக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

காந்திப் பேரவை... அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை சாா்பில் அதன் நிறுவனா் வைர.ந. தினகரன் தலைமையில் காந்தியடிகளின் சிலைக்குமாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், விவசாயிகள் சங்கத்தலைவா் கோ.ச. தனபதி, மூத்த குழந்தைகள் நல மருத்துவா் எஸ். ராம்தாஸ், திருக்கு பேரவைச் செயலா் சத்தியராம் ராமுக்கண்ணு, காந்திப் பேரவையின் அமைப்புச் செயலா் நமச்சிவாயம், நிா்வாகிகள் எஸ் ஆரோக்கியசாமி, சா. விஸ்வநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் மன்னா் கல்லூரியின் தேசிய மாணவா் படை மாணவா்களும் பங்கேற்றனா்.

பொன்னமராவதி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சியினா் திருமயம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சுப்புராம் தலைமையில் மகாத்மா காந்தியடிகளின் உருவப் படத்துக்கு, மலா் தூவி மரியாதை செலுத்தினா். இதில் வட்டாரத்தலைவா் வி.கிரிதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நிறைவை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT