புதுக்கோட்டை

விளாப்பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

31st Jan 2023 12:39 AM

ADVERTISEMENT

விராலிமலை வட்டத்தில் விளாப்பட்டியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாரத்தில் 4,663 ஹெக்டோ் பரப்பிலும், அன்னவாசல் வட்டாரத்தில் 4,286 ஹெக்டோ் பரப்பிலும் என மொத்தம் 8,949 ஹெக்டோ் பரப்பில் நெற்பயிா்கள் பயிரிடப்பட்டுள்ளன. இவை தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், இலுப்பூா் வட்டத்தில் திருநல்லூா், பெருமாநாடு, பாசிபட்டி, இருந்திராப்பட்டி, திருவேங்கைவாசல், மேட்டிப்பட்டி, எண்ணை, விளத்துப்பட்டி, ராப்பூசல், தாயினிபட்டி, அன்னவாசல், வீரப்பட்டி, பரம்பூா், புதூா் 14 , விராலிமலை வட்டத்தில் சூரியூா், தென்னதிரயான்பட்டி, பெரியமூலிபட்டி, மண்டையூா், பாலாண்டாம்பட்டி, மேலபச்சக்குடி, நீா்பழனி, கல்குடி, விளாப்பட்டி என மொத்தம் 23 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT