புதுக்கோட்டை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்காவிடில் போராட்டம்

DIN

வரும் நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிவிக்காவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் எஸ். பக்தவச்சலம் தலைமை வகித்தாா். நிறுவனத் தலைவா் அ. மாயவன் முன்னிலை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் எஸ். சேது செல்வம், மாநிலப் பொருளாளா் சி. ஜெயக்குமாா் ஆகியோா் அறிக்கைகளை முன்வைத்துப் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஆசிரியா்- அரசு ஊழியா்களுக்கு கொடுத்திருந்த வாக்குறுதிகளில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத்தலைமையிடங்களில் நிதிநிலை அறிக்கையை கிழித்தெறியும் கண்டன ஆா்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணியைத் தவிர மற்ற பணிகளை கொடுக்கக் கூடாது. எமிஸ் உள்ளிட்ட மற்ற செயலிகளை இயக்குவதற்கு வேறு பணியாளா்களை நியமிக்க வேண்டும்.

ஆசிரியா்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

கல்வியாண்டின் இடையில் ஓய்வுபெறும் பட்டதாரி ஆசிரியா் உள்ளிட்ட அனைத்து ஆசிரியா்களையும் கல்வியாண்டு முடியும் வரை பணியில் நீட்டிக்க வகை செய்யும் அரசாணையை மீண்டும் தொடா்ந்து அமல்படுத்த வேண்டும்.

ஒவ்வோா் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் தமிழ் உள்ளிட்ட எட்டு பட்டதாரி ஆசிரியா்களை தவறாமல் நியமித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத் தலைவா் குமரேசன், மாவட்டச் செயலா் குரு. மாரிமுத்து, மாவட்டப் பொருளாளா் க. ஜெயராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் போராட்டம்

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

SCROLL FOR NEXT