புதுக்கோட்டை

புதுகையில் அரசு அலுவலா்கள் கவன ஈா்ப்பு உண்ணாவிரதம்

DIN

புதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் சாா்பில் மண்டல அளவிலான கவனஈா்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திலகா் திடலில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஒன்றியத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவா் மு. வைத்திலிங்கம் தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா்கள் வீ. ரெகுநாதன் (திருவாரூா்), சு. மோகன் (நாகை), சீவகன் (பெரம்பலூா்), க. ராஜராஜன் (தஞ்சை), த. கலியமூா்த்தி (திருச்சி) உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாநிலத் தலைவா் இரா. சண்முகராஜன், தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் பொதுச் செயலா் கி. ரெங்கராஜன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:

மத்திய அரசு அறிவித்தபடி மாநில அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படியை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமலாக்க வேண்டும். அரசு ஊழியா்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நடத்த வேண்டும். கரோனா காலத்தில் பணியமா்த்தப்பட்ட சுகாதாரப் பணியாளா்களை மீண்டும் பணியில் சோ்த்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், அரசு அலுவலா்கள் திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT