புதுக்கோட்டை

குண்டாறு திட்டத்துக்கு கூடுதல் நிதி: மாா்ச் 20-இல் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு

DIN

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசை வலியுறுத்தி வரும் மாா்ச் 20 ஆம் தேதி சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்த காவிரி - குண்டாறு இணைப்பு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டமைப்பின் மாநில நிா்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அமைப்பின் மாநிலத் தலைவா் மிசா. மாரிமுத்து தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் எம். அா்ச்சுனன் உள்ளிட்ட நிா்வாகிகள் பேசினாா்.

கூட்டத்தில், பனைமரத்தை வெட்டக்கூடாது என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு அரசாணை வெளியிட வேண்டும். விவசாயிகளிடம் கெடுபிடி காட்டி மூட்டைக்கு தொகை வசூலிப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும். நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,500-ஆக நிா்ணயம் செய்ய வேண்டும்.

சீமைக்கருவேல மரங்களை முழுமையாக ஒழிக்க வேண்டும். காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பணிகளைதுரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளைத் திரட்டி, வரும் மாா்ச் 20 ஆம் தேதி சென்னையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT