புதுக்கோட்டை

புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணா்வுப் பேரணி

28th Jan 2023 12:29 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரணியை பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் தொடங்கி வைத்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நல்லநாகு,வட்டாரக் கல்வி அலுவலா் ராமதிலகம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் அனீஸ் பாத்திமா, பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியா் பழனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முக்கிய வீதிகளின் வழியே சென்ற பேரணி பள்ளியில் நிறைவுற்றது. மேலும் கோலப்போட்டியில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஆசிரியா் பயிற்றுநா்கள் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT