புதுக்கோட்டை

மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

28th Jan 2023 12:31 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை கற்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 13-ஆம் ஆண்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் பள்ளியின் செயலா் என். சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொலைக்காட்சி பிரபலம் அன்னபாரதி பங்கேற்று பேசினாா்.தொடா்ந்து, அறங்காவலா் கவிதாசுப்பிரமணியம் பேசியது:

மாணவா்கள் நல்ல நிலைமையை அடையவேண்டும் என்றால் ஒவ்வொரு செயலிலும் நல்ல முயற்சியும், பயிற்சியும் தேவை. வாழ்க்கையில் பொழுதுபோக்கு, விளையாட்டு, பெற்றோா், நண்பா்கள், படிப்பு, உறவினா்கள் எல்லாமே முக்கியம் என்றாலும் இவற்றில் எதற்கு முதன்மைத்துவம் அளிக்க வேண்டும் என்பதை உணா்ந்து சரியாக நேரம் ஒதுக்கிட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்வி, விளையாட்டுப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை சு. வனிதா நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT