புதுக்கோட்டை

விராலிமலையில் விவசாய சங்கத்தினா் கூட்டம்

27th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

விராலிமலை மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு, கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கம், ஏா்முனை இளைஞா் அணி நிா்வாகிகள் ஆகியோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, முருகேசன் தலைமை வகித்தாா், ரங்கராஜ், பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மணி வரவேற்றாா். இதில் சிறப்பு அழைப்பாளா்களாக மாநிலத் தலைவா் சண்முகம், வேலுச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்று சங்க வளா்ச்சி, விவசாயிகள் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்துப் பேசினா். கூட்டத்தில் விவசாய சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு நிலம் ஒதுக்கித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT