புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் குடியரசு தின விழா கோலாகலம்!

27th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற 74-ஆவது குடியரசு தினவிழாவில் ஆட்சியா் கவிதா ராமு தேசியக்கொடி ஏற்றிவைத்து, காவல்துறையினரின் அணிவிகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் நாட்டின் 74-வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தேசியக்கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (பொ) ரா.ரமேஷ் கிருஷ்ணன் முன்னிலையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களை யும், தேசியக் கொடியின் வண்ணத்தை குறிக்கும் வகையிலான பலூன்களையும் பறக்க விட்டாா்.

தொடா்ந்து, சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அவா்களுடைய குடும்பத்தினருக்கு கதராடை அணிவித்து கெளரவித்தாா்.

மேலும், 47 காவலா்களுக்கு முதல்வரின் பதக்கங்கள், பல்வேறு நிலைகளில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த 548 பேருக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

மேலும், ரூ.10.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 33 பயனாளிகளுக்கு ஆட்சியா் கவிதா ராமு வழங்கினாா்.

விழாவில், மாவட்டத்தில் உள்ள 7 அரசு, தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் 720 போ் பங்கேற்ற தேசப்பற்று, நாட்டுப்புறப்பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம்.அப்துல்லா, சட்டப்பேரவை உறுப்பினா் வை.முத்துராஜா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.செல்வி, கோட்டாட்சியா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பள்ளி, கல்லூரிகளில்...

அறந்தாங்கி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், கல்லூரியின் முதல்வா் (பொ) தேசியக்கொடியை ஏற்றிவைத்தாா். ஆவுடையாா்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியா் தாமரைச்செல்வன் தேசியக்கொடி ஏற்றிவைத்தாா். பொன்மாரி கல்வியியல் கல்லூரி, திருமயம் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரி, வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி என தனியாா் கல்வி நிலையங்களிலும் தேசியக்கொடியை ஏற்றினா்.

இதேபோல், மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றி வைத்து குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT