புதுக்கோட்டை

மாவட்ட வளா்ச்சிப் பணிகள்:கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

22nd Jan 2023 02:55 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத் திட்டப் பணிகள் குறித்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் இயக்குநருமான எஸ். கணேஷ் சனிக்கிழமை அலுவலா்களுடன் நேரில் ஆய்வு நடத்தினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு முன்னிலை வகித்தாா்.

அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை முழுமையாக மக்களிடம் கொண்டு செல்வதற்கு அரசுத் துறை அலுவலா்கள் விரைவாக செயல்பட வேண்டும் என கண்காணிப்பு அலுவலா் கணேஷ் கேட்டுக் கொண்டாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நா. கவிதப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) து, தங்கவேல் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT