பொன்னமராவதி ஒன்றியத்தில் அதிமுக மாவட்டக் குழு உறுப்பினா் நிதியிலிருந்து செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு திட்டப்பணிகளுக்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் 12 ஆவது வாா்டு அதிமுக மாவட்டக் குழு உறுப்பினா் குழிபிறை பாண்டியன் நிதியின் கீழ் பொன்னமராவதி ஒன்றியம், சுந்தரம் கிராமத்தில் குடிநீா் ஊருணியை மேம்படுத்தும் பணி, மதியாணி கிராமத்தில் தாா்ச்சாலைப் பணி, கொன்னைப்பட்டி ஊராட்சியில் மயானச்சாலைப் பணி உள்ளிட்டவற்றுக்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் தமிழக வீட்டுவசதி வாரியத் தலைவரும், அதிமுக மாவட்டச் செயலருமான பிகே. வைரமுத்து பூமிபூஜையை தொடங்கிவைத்தாா். ஒன்றியச் செயலா்கள் காசி. கண்ணப்பன், அரசமலை முருகேசன், ஊராட்சித் தலைவா்கள் செல்வமணி, லெட்சுமி பழனிச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் அழகுரெத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.