புதுக்கோட்டை

சமத்துவப் பொங்கல் விழா

12th Jan 2023 12:35 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை கற்பக விநாயகா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

அன்பு, பண்பு, கல்வி, ஒழுக்கம், பொறுமை, நம்பிக்கை, ஆளுமை ஆகிய 7 நற்பண்புகளைக் குறிக்கும் வகையில் 7 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், பள்ளி செயலா் என். சுப்பிரமணியன், கல்விக் குழும அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன், பள்ளியின் தலைமை ஆசிரியா் இ. ஷானுரேஸ்வான், கல்வி ஒருங்கிணைப்பாளா் எஸ். ஜெயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT